தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்த 157 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை | 157 people treated in govt hospitals for burns caused by firecrackers on Diwali

1380496
Spread the love

சென்னை: தீ​பாவளிக்கு பட்​டாசு வெடிக்​கும் போது தீக்​கா​யம் அடைந்த குழந்​தைகள் உட்பட 157 பேருக்​கு, சென்னை அரசு மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ளது. தீபாவளி பண்​டிகை நேற்று முன்​தினம் கொண்​டாடப்​பட்​டது. புத்​தாடை அணிந்​து, இனிப்​பு​களு​டன் பட்​டாசுகளை வெடித்து மக்​கள் தீபாவளியை கொண்​டாடினர்.

முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, பட்​டாசுகள் வெடிக்​கும் போது ஏற்​படும் தீக்​கா​யங்​களுக்கு சிகிச்சை அளிப்​ப​தற்​காக, சென்னை கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் 20 படுக்​கைகளு​டன் சிறப்பு வார்டு அமைக்​கப்​பட்​டது. அதே​போல், சென்னை உட்பட தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் தீக்​கா​யங்​களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், தீபாவளி அன்​றும், அதற்கு முந்​தைய நாளும் சென்​னை​யில் பட்​டாசு வெடிக்​கும் போது 157 பேர் தீக்​கா​யம் அடைந்​துள்​ளனர். இதில், 44 பேர் உள்​நோ​யாளி​களாக சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில், கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​யாக 13 பேர் சிகிச்​சை​யில் உள்​ளனர்.

புறநோ​யாளி​யாக 20 பேரும் சிகிச்சை பெற்று சென்​றுள்​ளனர். ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​யாக 2 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​யாக 6 பேர் சிகிச்சை பெறுகின்​றனர். புறநோ​யாளி​யாக 24 பேரும் சிகிச்சை பெற்​றுள்​ளனர்.

ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​யாக 2 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். புறநோ​யாளி​யாக 3 பேர் சிகிச்சை பெற்​றனர். அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​யாக 16 பேர் சிகிச்சை பெறுகின்​றனர். புறநோ​யாளி​யாக 32 பேரும் சிகிச்சை பெற்​றுள்​ளனர்.

கண்​களில் தீக்​கா​யம் ஏற்​பட்​ட​தால் எழும்​பூர் அரசு கண் மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​யாக 5 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். புறநோ​யாளி​யாக 34 பேரும் சிகிச்சை பெற்​றுள்​ளனர். இவை தவிர, சென்​னை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் 100-க்​கும் மேற்​பட்​டோருக்கு தீக்​கா​யங்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *