தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்: அரசு பேருந்து, ரயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்  | 8 lakh people travel from Chennai for Diwali

Spread the love

சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அரசு பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இதையொட்டி கிளாம்பாக்கத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு செய்தார். அப்போது, ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க அறிவுறுத்தினார். பயணிகளிடமும் பேருந்து இயக்கம் குறித்து கேட்டறிந்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. அரசு பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் புகாரளிப்பதற்கும் 94450 14436 என்ற எண்ணையும், ஆம்னி பேருந்துகளில் அதிககட்டண வசூல் புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம். தெற்கு ரயில்வே சார்பில் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தென் தமிழகத்துக்கு பயணிப்போர் என லட்சக்கணக்கானோர் திரண்டனர். இவர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்கும் பணியை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டிருந்தனர். சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா பெட்டி அருகே நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்து இடம்பிடித்தனர்.

இந்த நிலையங்களுக்குச் செல்வோராலும், கடைவீதிக்குச் சென்றோராலும் தி.நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இதர நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

இவ்வாறு அரசு பேருந்து, ரயில், ஆம்னி பேருந்து உள்ளிட்டவை வாயிலாக கடந்த 2 நாட்களில் சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இன்றும், நாளையும் சிறப்பு பேருந்து, ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கிடையே தீபாவளியையொட்டி, விமானக்கட்டணமும் 6 மடங்கு வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *