தீபாவளி: தமிழகத்தில் 21 பேருக்கு தீக்காயம்!

Dinamani2f2024 10 312fj4v8pp2v2fdownload.jpg
Spread the love

தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தீபாவளித் திருநாளான இன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : ஜம்மு – காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நிரந்தரமாக புதைக்கப்பட்டது: மோடி

இந்த நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 21 பேருக்கு தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

“சென்னையை பொறுத்தவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் 7, தஞ்சாவூரில் 6, மதுரையில் 5 மற்றும் திருச்சியில் 3 பேர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து ஏற்கெனவே வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *