தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ் கட்சி

Dinamani2f2025 01 082fwht08fz22f20250106088l.jpg
Spread the love

பாட்னா: பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிந்த சா்ச்சையால், அம்மாநிலத்தில் மொத்தம் 5 லட்சம் போ் எழுதிய முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நீடித்துவருகின்றன.

‘ஜன் சுராஜ்’ கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோா், பாட்னாவின் காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஜன. 2-ஆம் தேதி முதல் அவர் மேற்கொண்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று(ஜன. 8) வரை தொடர்கிறது.

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவர் சார்ந்துள்ள ஜன் சுராஜ் கட்சி இன்று தெரிவித்துள்ளது.

உண்ணாவிரதம் கடைப்பிடித்து வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள், அவர் உணவுவோ வேறு ஏதேனும் நீராகாரமோ உட்கொள்ளவில்லையெனில் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக ஜன் சுராஜ் கட்சித் தலைவர் மனோஜ் பார்தி தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *