தைவானில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர்.
தைவான் நாட்டின் தாய்சங் நகரில் கட்டப்பட்டு வரும் பல்பொருள் அங்காடியில் தீவிபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த கட்டடத்தின் உணவு பதப்படுத்தும் பிரிவில் ஏற்பட்ட தீ, கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியது. இந்த நிலையில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் விரைந்து கட்டடத்தை வெளியேறியிருந்தாலும், சிலர் வெளியேற முடியாமல் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த தீயணைப்புப் படையினருக்கு விரைந்து வந்து, தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இருந்தபோதிலும், எதிர்பாராதவிதமாக இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் எளிதில் தீப்பிடிக்கும் பஞ்சுபோன்ற பொருள்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.