போலீஸ் பூத் உள்ளே அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து பார்த்து உடனே தல்லாகுளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினரும், காவல்துறையினரும் பூர்ணச்சந்திரனின் உடலை சடலமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த நிலையில் பூர்ணச்சந்திரன் தற்கொலை செய்வதற்கு முன் அதற்கான காரணத்தை குறிப்பிட்டு நண்பருக்கு அனுப்பியதாகப் பகிரப்படும் வாய்ஸ் மெசேஜ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த ஆடியோவில், “திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்றாததை கண்டித்து தற்கொலை செய்து கொள்வதாகவும், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் சிலை முன் தற்கொலை செய்வதாகவும்’ தெரிவித்துள்ளார்.
இந்த ஆடியோ குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.