இந்த நிலையில், இயக்குநர் தருண் மூர்த்தியின் முதல் திரைப்படமான, ஆபரேஷன் ஜாவாவின் இரண்டாவது பாகம் ஆபரேஷன் கம்போடியா எனும் பெயரில் உருவாகின்றது.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய்யின் இசையில் உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாறன், லுக்மான் அவாரன், பாலு வர்கீஸ், இர்ஷாத் அலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முன்னதாக, 2021 ஆம் ஆண்டு வெளியான ஆபரேஷன் ஜாவா திரைப்படம், கேரளத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருந்தது. இதனால், அதன் 2 ஆம் பாகமான ஆபரேஷன் கம்போடியா திரைப்படமும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பைசன் காளமாடன்: மாரி செல்வராஜின் வரிகளில் புதிய பாடல்!