துணிக்கடை பொம்மையை வைத்து ஏஐ ரோபோட் டீச்சர் செய்த அரசு பள்ளி மாணவர் | UP Government School Student Builds AI Robot Teacher, Video Goes Viral on Social Media

Spread the love

தற்போது, சோஃபியால் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முடிகிறது. இப்போதைக்கு இந்தி மொழியிலும், எதிர்கால புதுப்பிப்புகளில் மற்ற மொழிகளிலும் பேச முடியும்.

பொது அறிவு, இயற்பியல் மற்றும் அடிப்படைக் கணக்கு உட்பட பல்வேறு பாடங்களில் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், மனித ஆசிரியர்கள் இல்லாதபோது வகுப்புகள் தடைபடாமல் இருக்கவும், மாற்று ஆசிரியராகச் செயல்படவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

முதற்கட்டமாக மாதிரி ஐடியாகவே இருக்கும் இது; எதிர்காலத்தில் முழுமையான ஏஐ டீச்சர் ரோபோட்டாக உருவாக வேண்டும் என்பதே ஆதித்யாவின் கனவே இருக்கிறது.

ஏஐ ரோபோட் டீச்சர்

ஏஐ ரோபோட் டீச்சர்

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆதித்யாவின் தந்தை காம்பவுண்டர் வேலை பார்க்கிறார். ரோபோட்டை தயார் செய்து முடிக்கும் வரை ஏற்பட்ட செலவுகளை ஆதித்யாவுக்காக அவரது தந்தை கடன் வாங்கி உதவியுள்ளார்.

இதுகுறித்து பேசும் ஆதித்யா, “இது இந்தியாவின் இரண்டாவது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட். சில நேரங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், மாணவர்களுக்கு அன்றைய வகுப்புகள் இல்லாமலே போகிறது. இந்தப் பிரச்சனையை தீர்க்கவே நான் இதை உருவாக்கியுள்ளேன். விண்வெளி ஆராய்ச்சியாளராவதே என்னுடைய லட்சியம்” என்று கூறினார்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆராய்ச்சி ஆய்வகங்களை நிறுவி இளம் சயின்டிஸ்ட்களை உருவாக்க வேண்டும், மற்றும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசிற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஆதித்யாவின் இந்த ஆர்வத்தை பலரும் பாராட்டி, ஊக்குவித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *