“துணி துவைப்பது பெண்களுக்கான வேலையா?” – சீன நிறுவனத்தின் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்! | “Washing Clothes Is Women’s Work” – Chinese Company’s Controversial Notice Sparks Outrage

Spread the love

சீனாவைச் சேர்ந்த பிரபல ஆண்கள் ஆடை நிறுவனம் ஒன்று, தங்கள் தயாரிப்பில் இடம்பெற்ற வாசகத்திற்காக கடும் விமர்சனத்திற்குப் பாயப்பட்டுள்ளது.

“துணி துவைப்பது பெண்களுக்கான வேலை” என்ற தொனியில் அந்த நிறுவனம் கூறிய வாசகம், இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ‘கு ஜுவோ காங் ஜெங்’ (Gu Zhuo Kang Zheng) என்ற ஆடை நிறுவனம், ஆண்கள் அணியும் ஆடைகளை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் கோட்டில் இருந்த குறிப்பு தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த ஆடையின் பின்புறத்தில் இருந்த லேபிளில், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் “தயவுசெய்து இதை உங்கள் அன்புக்குரிய பெண்ணிடம் கொடுங்கள், அவருக்கு எல்லாம் தெரியும்” என்று அச்சிடப்பட்டிருந்தது.

ஆடையை எப்படித் துவைக்க வேண்டும், எந்திரத்தில் துவைக்கலாமா அல்லது கையில் துவைக்கலாமா என்ற எந்த தொழில்நுட்ப வழிகாட்டுதலும் அதில் இல்லை. அதற்கு பதிலாக, “பெண்ணிடம் கொடுத்துவிடுங்கள், அவர் பார்த்துக்கொள்வார்” என்ற தொனியில் குறிப்பிட்டிருந்தது.

இந்த ஆடையை வாங்கிய இணையவாசி ஒருவர், அந்த லேபிளின் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவுடன் இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்துள்ளது. பலரும் அந்த நிறுவனத்தின் செயலைக் கடுமையாக விமர்சித்தனர். இந்த விவகாரம் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆடை நிறுவனம் பொதுமன்னிப்பு கோரியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *