துணைவேந்தர் நியமன வழக்கு; உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்! | Vice-Chancellor appointment case: The Supreme Court has lifted the stay imposed by the High Court.

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்தை நிறைவேற்றி இருந்தது.

இந்தச் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், இந்த தடையை நீக்கி தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்த தமிழக அரசு, அதனை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது.

மு. க ஸ்டாலின்

மு. க ஸ்டாலின்

இந்தச் சட்டத்திருத்தம் உட்பட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தன. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது. அந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கலாம் என்ற சட்டத்திருத்தமும் அடங்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *