இந்த நிலையில் பெருமாநல்லூர் அருகே தொரவலூர் குளத்தில் வெள்ளைச் சாக்கு கட்டிய அட்டைப்பெட்டி மிதப்பதாக சனிக்கிழமை போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்வையிட்டனா். அப்போது வெள்ளை சாக்கு கட்டிய அட்டைப்பெட்டி மிதப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அட்டைப்பெட்டியை கிணற்றிலிருந்து போலீஸாா் மீட்டனா். அதில் காணாமல் போன கோவிந்தசாமி உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அட்டைப்பெட்டியில் வைத்து குளத்தில் தூக்கி வீசியிருப்பது தெரிய வந்தது.
மேலும் அவரது உடலின் மீதி பாகங்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெருமாநல்லூர் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டுநரைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியது யாா் என்பது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.