துனிசியாவில் புதிய பிரதமராக சர்ரா ஜாஃபரானி நியமிக்கப்பட்டுள்ளார்.
துனிசியாவில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் துனிசியா பிரதமர் கமெல் மடௌரியை பதவி நீக்கம் செய்து துனிசியா அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டார். அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய துனிசியா அதிபருக்கு முழு அதிகாரம் உள்ளது.
மேலும், பொதுப்பணித்துறை மற்றும் வீட்டுவசதி அமைச்சராக இருந்த சர்ரா ஜாஃபரானியை புதிய பிரதமராக நியமித்தார். இதன்மூலம், ஜாஃபரானி இரண்டு ஆண்டுகளுக்குள் துனிசியாவின் மூன்றாவது பிரதமராகவும், வரலாற்றில் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகவும் திகழ்கிறார்.
இதையும் படிக்க: இந்திய அரசுக்குத் தலைவலியாகும் மஸ்க்கின் குரோக் ஏஐ!
துணை-சஹாரா ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பாவை அடையும் முயற்சியில் துனிசியாவுக்குள் செல்வதால், புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து, நெருக்கடி ஏற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
இந்த நிலையில், துனிசியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்தாண்டில் 1.4 சதவிகிதத்தை தாண்டவில்லை என்றும், வட ஆப்பிரிக்க நாட்டின் பொது நிதி கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அதிபர் கைஸ் சையத் கூறினார்.