துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது; இணையத்தில் பரவும் வீடியோ! | Indian fighter jet crashes at Dubai Airshow; Video goes viral on internet!

Spread the love

துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17) தொடங்கியது.

இதில் இந்திய விமானப்படையின் விமானங்கள் உட்பட உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள் பங்கேற்றன.

இந்த நிலையில் விமான கண்காட்சியின் கடைசி நாளான இன்று இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விமானத்தை இயக்கிய விமானியின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கண்காட்சியில் ஆயிரக்காணக்கான மக்கள் சாகசத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது இந்த விபத்து நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவத்தால் தயாரிக்கப்படும் மிக முக்கியமான விமானம் தேஜஸ். இது மணிக்கு 2200 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக செல்லக் கூடியது. மேலும் விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்படவும், அதில் தரையிறங்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *