சென்னை: ஆம்ஸ்ட்ராங்கின் கைத்துப்பாக்கி, அவரிடம்தான் இருந்தது. இது அரசியல் பழிக்குப்பழியாக நடந்த கொலை அல்ல என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் (54) நேற்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வழக்கில் 8 பேர் சரணடைந்துள்ளனர்.
கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை, அரசியலில் பழிக்குப்படியாக நடந்த கொலை அல்ல, கைதானவர்கள் யாரும் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் துப்பாக்கி அவரிடம்தான் இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு ஜூன் 13ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கி அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை வழக்கில் சரணடைந்த 6 பேரும் மீது பல வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட ஆற்காடு பாலா மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளன என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.