பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், போட்டிக்குத் தேவையான கண்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் உள்ளிட்ட எந்த நவீன கருவிகளும் இல்லாமல் அசால்ட்டாக வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், போட்டிக்குத் தேவையான கண்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் உள்ளிட்ட எந்த நவீன கருவிகளும் இல்லாமல் சாதரண டீசர்ட் அணிந்து, அசால்ட்டாக ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்ற துருக்கி வீரர் யூசஃப் டிகெக் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Yusuf Dikeç from Turkiye came with only his glasses and won the silver medal at the Olympics. King like John Wick is on the world agenda
— Tansu Yegen (@TansuYegen) August 1, 2024
வெள்ளிப் பதக்கத்தை துருக்கி ஜோடி யூசஃப் டிகெக் – செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர். 51 வயதான யூசஃப் டிகெக், துல்லியமான பார்க்கக்கூடிய கண் கண்ணாடி, சப்தம் கேட்காமல் இருக்கக்கூடிய கருவிகள் எதுவும் அணியாமல் போட்டியில் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாதாரணமான கண்ணாடியை அணிந்து கொண்டு ஒரு கையை பாக்கெட்டில் வைத்து கொண்டு பல வீரர்களை தோற்கடித்து வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பில் இருந்து தற்போது வரை 5 ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த வெள்ளிப் பதக்கம் தான் இவர் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.
Currently the most famous man in the world
— Enez Özen (@Enezator) July 31, 2024
டிகெக்கின் இந்தச் செயல்திறனை கொலையாளியின் துல்லியத்துடன் ஒப்பிடும் கருத்துக்களும் இணையத்தில் வைரலாகின. சிறப்பாக செயல்பட்ட இந்த இணை இறுதி ஸ்கோரான 16-14, உடன் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டது.
செர்பியாவுக்காக விளையாடிய மைக் மற்றும் ஜோரானா அருனோவிச் ங்கம் வென்றனர் .