ஆபரேஷன் கிளா-லாக் என்னும், வடக்கு இராக் எல்லை மீதான நேர வரம்பற்ற துருக்கி படையினரின் ஆயுத நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 1980-களில் இருந்து துருக்கியில் பிரிவினைவாதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) அந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த அமைப்புக்கு சிரியாவிலும், இராக்கிலும் செயல்பட்டு வரும் குா்துப் படையினா் உதவி அளிப்பதாக துருக்கி கூறி வருகிறது. இதன் காரணமாக, அந்தப் படையினரின் நிலைகள் மீது துருக்கி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் வடக்கு இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியினரின் மறைவிடங்கள், தளங்கள் மீது துருக்கி படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் 17 பேர் இறந்ததாக இராக் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.