துருவி துருவி கேள்வி: பிப் 2-வது வாரத்தில் குற்றப்பத்திரிகை: விஜய் பெயர் சேர்க்க சிபிஐ முடிவு ?  – Kumudam

Spread the love

குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்? 

விஜய்யிடம் கடந்த ஜன. 12 ஆம் தேதி 6 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் நடத்தினர். இன்று இரண்டாவது முறையாக காலை 11 மணிமுதல் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழக காவல் துறை அதிகாரிகள் சிலரிடமும் டில்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் கரூர் பலி தொடர்பாக குற்றப்பத்திரிகையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில், தவெக தலைவர் விஜய்யின் பெயரையும் சேர்க்க திட்டமிட்டிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துருவி துருவி கேள்வி: ஆதாரம் கேட்ட சிபிஐ

தவெக தலைவர் விஜயிடம் இன்று இரண்டாவது முறையாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் துருவி துருவி கேள்விகளை கேட்டு வருகின்றனர். 

கரூரில் பிரசாரம் மேற்கொண்ட போது, வாகனத்தில் நின்று பேசும்போது கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா?, 7 மணிநேரம் தாமதம் ஏன்?, கூட்ட நெரிசலின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, நெரிசலில் வாகனத்தை முன்னோக்கிச் செலுத்தியது ஏன்? போன்ற பல்வேறு கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் சில கேள்விகளுக்கு விஜய் பதிலளித்த நிலையில், சில கேள்விகளுக்கு அவகாசம் கோரியுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும், விஜய் அளித்த சில பதில்களுக்கு சிபிஐ தரப்பில் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், இன்றுடன் விஜய்யிடம் விசாரணை நாளையும் தொடரும்  எனத் தெரிகின்றது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு  முன்பாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகள் தயாராகி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *