அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய மு.க. ஸ்டாலின், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதன் மூலம் கிடைத்த முதலீடுகள் குறித்துப் பேசினார்.
மேலும், அமைச்சர் துரைமுருகன் – ரஜினிகாந்த் இடையிலான வார்த்தைப்போர் குறித்து அவர் பேசியதாவது, அமைச்சர் துரைமுருகனும் ரஜினிகாந்தும் நீண்டகால நண்பர்கள். இதனை அவர்களே கூறிவிட்டனர். இதை நீங்கள் துரைமுருகன் கூறியதைப் போன்று, நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனக் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்க பயணம் முடிந்தவுடன் அமைச்சரவை மாற்றம் இருக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பொறுத்திருந்து பருங்கள் என பதில் அளித்தார். மாற்றம் ஒன்றே மாறாதது எனவும் முதல்வர் கூறினார்.