சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றுவதாக அறிவித்த நிலையில், துரை வைகோவுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன் என துணை பொதுச் செயலா் மல்லை சத்யா உறுதியளித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தாயகம் அலுவகத்தில் மதிமுக குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் பொதுச் செயலாளர் துணை பொதுச்செயலாளர் பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நிா்வாகக் குழு கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளுக்கு பின்பு துரை வைகோ தமது முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தாா்.