தூக்கமின்மை பிரச்னை இல்லாதபோதும் இப்படி கொட்டாவி வருவது ஏன்? | Why do I yawn frequently during the day, even though I sleep well at night?

Spread the love

நீங்கள் நன்றாகத் தூங்குவதாக நினைத்தாலும், உங்கள் உடலுக்குத் திருப்தி அளிக்கும் ஆழ்ந்த உறக்கம் (Deep Sleep) கிடைக்காமல் இருக்கலாம். ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) என்ற பாதிப்பு இருக்கிறதா என்றும் பாருங்கள்.

அதாவது, அதிகக் குறட்டையுடன் தூங்குபவர்களுக்கு, தூங்கும்போது காற்றோட்டம் தடைப்பட்டு, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம்.

இதனால் இரவில் தூக்கம் திருப்தியாக இருக்காது, பகலில் அதிக சோர்வு மற்றும் கொட்டாவி வரலாம். தூக்கத்தின் அளவு போதுமானதாக இருந்தாலும், அதன் தரம் குறைவாக இருந்தால், அதாவது சோர்வுக்கு வழிவகுத்தாலும் கொட்டாவி வரலாம்.

அதிகக் குறட்டையுடன் தூங்குபவர்களுக்கு..

அதிகக் குறட்டையுடன் தூங்குபவர்களுக்கு..

ரத்தச்சோகை  (Anemia) எனப்படும் அனீமியா இன்று பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். பலருக்கு சோர்வு மற்றும் கொட்டாவிக்கு இதுவே முக்கிய காரணமாக உள்ளது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதால், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் திறன் குறைகிறது. எனவே, ரத்தச்சோகைக்கான டெஸ்ட்டை செய்து பார்க்கவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *