தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார் | CM to inaugurate electric car factory in Thoothukudi today

1371793
Spread the love

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள வின்ஃ​பாஸ்ட் நிறு​வனத்​தின் மின்​சார கார் தொழிற்​சாலையை முதல்​வர் ஸ்டா​லின் இன்று காலை திறந்து வைத்​து, முதல் விற்​பனையை தொடங்கி வைக்​கிறார்.

வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்ஃ​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில் ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்​களை உற்​பத்தி செய்​யும் வகை​யில், தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டது. முதல்​வர் ஸ்டா​லின் கடந்த ஆண்டு இந்த ஆலைக்கு அடிக்​கல் நாட்​டி​னார். முதல்​கட்​ட​மாக ரூ.1,120 கோடி செல​வில் 114 ஏக்​கரில் தொழிற்​சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இங்கு தற்​போது வி.எஃப்​-6, வி.எஃப்-7 வகை கார்​கள் உற்​பத்தி செய்​யப்​பட்டு விற்​பனைக்கு தயா​ராக உள்​ளன.

இந்​நிலை​யில், மின்​சார கார் தொழிற்​சாலை திறப்பு விழா இன்று காலை 10.30 மணி அளவில் நடை​பெறுகிறது. முதல்​வர் ஸ்டாலின் சென்​னை​யில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணிக்கு தூத்​துக்​குடி விமான நிலை​யம் வரு​கிறார். அங்​கிருந்து காரில் வின்ஃ​பாஸ்ட் ஆலைக்கு சென்​று, தொழிற்​சாலையை திறந்து வைத்​து, கார் விற்​பனையை தொடங்கி வைக்​கிறார்.

முதலீட்​டாளர்​கள் மாநாடு: தொடர்ந்​து, தூத்​துக்​குடி​யில் நடை​பெறும் தொழில் முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் முதல்​வர் பங்​கேற்​கிறார். இதில், பல்​வேறு தொழில் முதலீடு​கள் தொடர்​பாகபுரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின்​றன. ஏற்​கெனவே மேற்​கொள்​ளப்​பட்ட ஒப்​பந்​தத்​தின் அடிப்​படை​யில் சில நிறு​வனங்​களை​யும் முதல்​வர் தொடங்கி வைக்​கிறார். இந்த நிகழ்​வு​களில் கனி​மொழி எம்​.பி., அமைச்​சர்​கள் டிஆர்​பி.​ராஜா, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

பின்​னர், மதி​யம் 12.45 மணி அளவில் தூத்​துக்​குடி விமான நிலை​யத்​தில் இருந்து தனி விமானம் மூலம் முதல்​வர் சென்னை திரும்​பு​கிறார். தூத்​துக்​குடி வரும் முதல்​வருக்கு சிறப்​பான வரவேற்பு அளிக்கதிமுக​வினர் ஏற்​பாடு செய்​துள்​ளனர். முதல்​வர் வரு​கையை முன்​னிட்டு எஸ்​.பி. ஆல்​பர்ட் ஜான் தலை​மை​யில் போலீ​ஸார்​ விரி​வான பாது​காப்​பு ஏற்​பாடு​களை செய்​துள்​ளனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *