தூத்துக்குடியில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் இளம்சிறார் உட்பட 3 பேர் கைது | Three People, Including a Minor, Arrested for Gang-Raping a Woman in Thoothukudi

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அரசர்குளத்தில் உள்ள தனியார் ஹாலோபிளாக் கம்பெனியில் 15 நாட்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன், மனைவி வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

நெல்லையில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஹ்புல் ஹூசைன் என்பவர் ஹாலோபிளாக் கம்பெனி உரிமையாளரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு இவர்களை வேலைக்குச் சேர்த்துள்ளார்.

ஆனால் அந்த கம்பெனியில் போதிய அடிப்படை வசதி இல்லாததாலும், சம்பளம் போதாது என்பதாலும் அவர்கள் இருவரும் வேலையிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்முறை

கூட்டு பாலியல் வன்முறை
விகடன்

பின்னர், இருவரும் கேரள மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக அரசர்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் இருவரும் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை போனில் தொடர்பு கொண்ட முகமது மஹ்புல் ஹூசைன், அரசர்குளத்திலேயே வேலை செய்யுமாறு மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பேச வேண்டும் என கூறி, அவர் பைக்கில் அசாமைச் சேர்ந்த 2 இளம்சிறார்களுடன் சிவந்திபட்டி பகுதியில் நின்றுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *