தூத்துக்குடி: இயற்கை உரம் என்ற பெயரில் ரசாயன உரம்; குடோனுக்கு சீல்; சிக்குகிறார்களா வேளாண் அதிகாரிகள்? | Thoothukudi: Sale of chemical fertilizers in name of natural fertilizers; Godown sealed

Spread the love

அதனைத் தொடர்ந்து அந்தக் குடோன் சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் பேசினோம், “இந்தக் குடோனில் 160 பேரல் தியாமெத்சம் ரசாயன திரவம் மற்றும் புகையிலை குவியல் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகப்படும்படியான சில பூச்சிக்கொல்லி மருந்துகளையும், எண்ணெய் மாதிரியான திரவங்களையும் கைப்பற்றியுள்ளோம். இதை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்து இயற்கை உரமா அல்லது ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லி மருந்தா என்பதை உறுதி செய்து, அதன் பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் இந்தக் குடோன் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் செயல்பாட்டில் இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே முதல் கட்டமாக குடோனை மூடி சீல் வைத்துள்ளோம்” என்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

இந்தச் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வேளாண் அதிகாரிகள் சிலரின் துணையின்றி இதுபோன்ற உரம் தயாரிப்பும், விநியோகமும், விற்பனையும் சாத்தியமில்லை எனவும், இதுபோன்ற நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்து வரும் வேளாண் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததன் விளைவுதான் இது, எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *