தூத்துக்குடி பள்ளி மாணவி மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், 9 நாள்களுக்குப் பிறகு டி.என்.ஏ பரிசோதனை முடிவின் அடிப்படையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பள்ளி மாணவி, மர்மமான முறையில், கடந்த 10-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. சந்தேகிக்கும் படியாக 14 பேரிடம் முதற்கட்ட விசாரணை நடந்தது. அதன்பிறகு மாணவியுடன் படித்த சக மாணவர்கள், உறவினர்கள், உறவினர்களில் சந்தேகிக்கும்படியான நபர்கள் என விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும், குற்றவாளிகளைப் பற்றி துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வந்தனர்.
சந்தேகப்படும் 5 நபர்களின் டி.என்.ஏ மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வக பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அதில், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீஸார் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். “மாணவியின் நகத்தில் இருந்த சிறிய சதைத் துணுக்கு மூலம் நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில் கொலையாளி கண்டறியப்பட்டுள்ளார். முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் இருந்து பைக்கைத் திருடி வந்த தர்ம முனீஸ்வரன், மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அவரைக் கொலைசெய்துள்ளார்.