தூத்துக்குடி: பைக் ரிப்பேயர் செய்ய பணம் கேட்டு மதுபோதையில் தகராறு; மகனைக் கொன்ற தந்தை கைது | Thoothukudi: Father arrested for killing son over drunken argument over bike repair

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகிலுள்ள படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இவர்களுக்கு கனகராஜ், பாலபாரதி என இரண்டு மகன்கள் உள்ளனர்.

பாலபாரதி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மிக்சர் பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவரது மூத்த மகனான கனகராஜ் மட்டும் படர்ந்தபுளியிலுள்ள தாத்தா பாண்டி, பாட்டி மாடத்தி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். 12-ம் வகுப்பு வரை படித்த கனகராஜ், தொடக்கத்தில் திருவள்ளூரில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

எட்டயபுரம் காவல் நிலையம்

எட்டயபுரம் காவல் நிலையம்

அப்போது, மதுபோதைக்கு அடிமையாகி தினமும் தகராறு செய்து வந்ததால், திருந்தி வாழட்டும் என்ற நினைப்பில், கனகராஜை இங்கு அனுப்பி வைத்துள்ளனராம். இங்கும் கஞ்சா போதைக்கு அடிமையான கனகராஜ், அடிக்கடி பாட்டியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளாராம்.

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி பைக்கைச் சரி செய்ய வேண்டுமெனக் கூறி பாட்டியிடமிருந்து தங்கக்கம்மல், மோதிரத்தைப் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாடத்தி அம்மாள், மகன் பாலச்சந்திரனுக்கு தகவல் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *