தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை கைவிட முடியாது: நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம் | Govt says court cases against lawyers who fought in support of sanitation workers cannot be dropped

1374786
Spread the love

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு ஆதர​வாகப் போராடிய வழக்​கறிஞர்​கள் மீதான வழக்​கு​களை கைவிட முடி​யாது என உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் திட்​ட​வட்​ட​மாக தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, போலீ​ஸார் மீதும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ள​தால் இந்த சம்​பவம் தொடர்​பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலை​மை​யி்ல் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்​கலாம் என நீதிப​தி​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்​மைப் பணி​யாளர்​கள் நடத்​திய தொடர் போராட்​டத்​தின்​போது அவர்​களுக்கு ஆதர​வாக போராடிய வழக்​கறிஞர்​கள் மற்​றும் சட்​டக்​கல்​லூரி மாணவர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​திருந்​தனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​துள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்ட நிலை​யில் அவர்​கள் அனை​வரும் உடனடி​யாக விடுவிக்​கப்​பட்​டனர்.

தவறான முன்னுதாரணம்: இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி. லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தூய்​மைப் பணி​யாளர்​களுக்​காக போராட்​டத்​தில் ஈடு​பட்ட வழக்​கறிஞர்​கள் மீது பதிவு செய்​யப்​பட்ட எஃப்​ஐஆரை ஏன் கைவிடக்​கூ​டாது என நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ரவீந்​திரன், ‘‘வழக்​கறிஞர்​கள் மீது பதிவு செய்​யப்​பட்ட வழக்​கு​களை கைவிட முடி​யாது. தூய்மை பணி​யாளர்​கள் விஷயத்​தில் போராட்​டத்​தில் ஈடு​பட்ட வழக்​கறிஞர்​களின் செய​லால் அரசு சொத்​துகள் மட்​டுமின்றி போலீ​ஸாரும், தனி​நபர்​களும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த வழக்​கு​களை கைவிட்​டால் அது தவறான முன்​னு​தா​ரண​மாகி விடும். கைது செய்​யப்​பட்ட வழக்​கறிஞர்​கள் ஏற்​கெனவே

விடுவிக்​கப்​பட்​டு​விட்​ட​தால் இந்த ஆட்​கொணர்வு மனு​வும் காலா​வ​தி​யாகி விட்​டது” என்​றார். அதற்கு நீதிப​தி​கள், சமூகத்​தின் விளிம்பு நிலை​யில் உள்ள தூய்​மைப் பணி​யாளர்​களுக்​காக போராட்​டத்​தில் ஈடு​பட்ட வழக்​கறிஞர்​கள் மீது இவ்​வளவு தீவிரம் காட்ட வேண்​டுமா? என்​றும், இந்த விவ​காரத்​தில் மறப்​போம், மன்​னிப்​போம் என்ற நிலைப்​பாட்டை தமிழக அரசு எடுக்​கலாமே, போலீ​ஸார் மீதும் குற்​றச்​சாட்டு உள்​ளதே, என்​றனர்.

தூண்டுதலின்பேரில் போராட்டம்: அதற்கு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ. ரவீந்​திரன், போராட்​டத்​தில் ஈடு​பட்ட துப்​புரவு பணி​யாளர்​களுக்கு ஆதர​வாகத்​தான் தமிழக அரசு செயல்​படு​கிறது. மாநக​ராட்​சி​யில் 11 வார்​டு​கள் ஏற்​கெனவே தனி​யார் மயமாக்​கப்​பட்ட நிலை​யில், தற்​போதைய போராட்​டம் உள்​நோக்​கம் கொண்​டது. தூய்​மைப் பணி​யாளர்​களை தூண்​டி​விட்டு போராட்​டத்​தில் ஈடுபட வைத்​துள்​ளனர். போலீ​ஸார் தவறு செய்​திருந்​தால் அவர்​கள் மீதும் தாராள​மாக நடவடிக்கை எடுக்​கலாம், என்​றார்.

அப்​போது மனு​தா​ரர்​கள்தரப்​பில், 2 பெண் வழக்கறிஞர்​கள் கடுமை​யாகத் தாக்​கப்​பட்​ட​தாக கூறப்​பட்​ட​தால் அவர்​களை அழைத்து நீதிப​தி​கள் விசா​ரித்​தனர். பின்​னர் பெண் வழக்​கறிஞர்​களிடம் காவல்​துறை அதி​காரி​கள் அத்​து​மீறி நடந்​துள்​ளனர். எனவே இதுதொடர்​பாக உயர் நீதி​மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலை​மை​யில் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்​கலாம், என கருத்து தெரி​வித்தனர். ஆட்​கொணர்வு வழக்​கில் இது​போன்ற உத்​தரவை பிறப்​பிக்க முடி​யாது எனக்​கூறி அரசு தரப்​பில் கடும் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள், இந்த வழக்​கில் இடைக்​கால உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும், எனக்​கூறி விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *