தூய்மைப் பணியாளராக இருக்கும் பத்மா, கடந்த ஜனவரி 11-ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் (தி.நகர்) பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது குப்பையில் 45 சவரன் தங்க நகைகளைக் கண்டெடுத்தவர், அதை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இவரது நேர்மையைப் பலரும் பாராட்டியிருந்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பத்மாவை நேரில் அழைத்து, அவரது நேர்மையைப் பாராட்டியதோடு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது ரஜினியும் பத்மாவை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.