தென்காசி: தென்காசிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழியில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், அந்த மாணவிகளிடம் சிலம்பத்தைப் பெற்று ஆர்வமாகச் சுற்றினார்.
தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்களும், மக்களும் வரவேற்பு அளித்தனர்.
அப்போது, சுரண்டை நகராட்சி, கீழசுரண்டையில் சமீபத்தில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் சாலையில் சிலம்பம் சுற்றி முதல்வரை வரவேற்றனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின், மாணவ, மாணவிகளுடன் உற்சாகத்துடன் சிலம்பம் சுற்றி மகிழ்ந்தார். இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

இதனிடையே, நான் முதல்வன் திட்டத்தில் பயின்று முதல் மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவி பிரேமாவுக்கு, கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் நிலையில், அதனை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
		 
		 
		