தென்காசி: இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து – 6 பேர் பலியான சோகம்

Spread the love

தென்காசி மாவட்டம் இடைகால் அருகில் உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் இன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த எம்.ஆர். கோபாலன் ஆகிய இரண்டு தனியார் பேருந்துகள் இடைகால் அருகிலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் இரண்டு பேருந்தும் பதிவுக்கு மேல் பேருந்துகளுக்குள் சென்றுவிட்டது. இதில் தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து விபத்து

மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் நேரில் சென்று மீட்புபணிகளை பார்வையிட்டார். போக்குவரத்து நெருக்கடியான பரபரப்பான காலை நேரத்தில் இரண்டு பேருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்து தென்காசி மாவட்டத்தை சோகத்தில் உள்ளாக்கி உள்ளது.

இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்களைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்.” எனக் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *