தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை! வேலைவாய்ப்பு விளம்பரத்தால் சர்ச்சை!

Dinamani2f2024 12 182fq0c1u2b82fgfah8ssagaa1xmf.png
Spread the love

நொய்டாவை மையமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தில் தென்னிந்தியர்கள் தகுதியில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தளத்தில் பதிவிடப்படும் விளம்பரத்தில் வெளிப்படையாக குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை காட்டியுள்ளதற்கு பலர் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : பூடானையும் ஆக்கிரமிக்கும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்?

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மெளனி கன்சல்டிங் சர்வீஸ் என்ற நிறுவனம் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை லிங்க்டின் தளத்தில் வெளியிட்டிருந்தது.

அந்த பதிவில், டேட்டா அனலிஸ்ட் பதவிக்கு 4 ஆண்டுகள் அனுபவமுள்ள தொழில்நுட்ப தேவைகளுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ஹிந்தி மொழி நன்றாக பேச, படிக்க தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என்றும் பதிவில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நொய்டா நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரம்

இந்த நிறுவனத்தின் விளம்பரம் இணையதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் நிறுவனத்துக்கு ஆதரவாக, இந்த பணிக்கு ஹிந்தி மிகவும் அவசியம் என்பதாலும், தென்னிந்தியர்களால் நுட்பமாக ஹிந்தி பேச முடியாது என்று ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த மற்றொரு பயனர், தென்னியர்களில் நன்றாக ஹிந்தி தெரிந்தவர்களும் உள்ளர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சொந்த நாட்டுக்குள்ளேயே பாகுபாடு காட்டுவது நியாயமா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *