தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர் – தேடும் பணி தீவிரம் | electricity worker who was swept away by the Tenpennai river

1343141.jpg
Spread the love

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டில் தென்பெண்ணை ஆற்றின் வழியாக மின்கம்பியை எடுத்துச் செல்ல முயன்ற தற்காலிக மின்வாரிய ஊழியர் ஆற்றில் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நிரம்பி வருவதால், தென்பெண் ணையாற்றில் 13 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை: இதனால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண் ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அணை நிர்வாகத்தின் மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் திலீப்குமார் (50) மேலும் இரு ஊழியர்கள் திருவண்ணா மலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் இருந்து நேற்று தென் பெண்ணையாற்றின் வழியாக மின்சார கம்பியை எடுத்துவர முயன்றனர்.

அப்போது அவர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மூவரில் இருவர் கரை திரும்பிய நிலையில், திலீப்குமார் மட்டும் மாயமானார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மீட்பு மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட திலீப்குமாரை ரப்பர் படகு மூலமாக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *