தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

Dinamani2f2025 03 282fx90wnxnt2fnewindianexpress2025 01 23a6khtapxap25022861528516.avif.avif
Spread the love

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத் தீயானது வடக்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள உய்சோங் நகரத்தைச் சேர்ந்த மதிக்கத்தக்க நபர் ஒருவரால்தான் உண்டாகியிருக்கக் கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிக்ககின்றனர்.

இந்நிலையில், உய்சோங் நகரத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த மார்ச் 22 அன்று அங்குள்ள மலைக்குன்றின் மீதுள்ள அவரது குடும்பக் கல்லறையில் செய்த சடங்கின்போது பற்ற வைத்த நெருப்பினால் இந்தக் காட்டுத் தீயானது உண்டாகியிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தென் கொரிய காவல் துறையினர் அந்நபரின் மகளிடம் முதற்கட்ட விசாரணையை தற்போது மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் அவரிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் தற்செய்லாக காட்டுத் தீ உண்டாக்குபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் 30 மில்லியன் வான் (20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) மதிப்பிலான பணம் அபராதமாக விதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

முன்னதாக, தென் கொரியாவில் நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றினால் தொடர்ந்து பரவிய இந்தக் காட்டுத் தீக்கு 24-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 37,000-க்கும் மேற்பட்டோர் இடமாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மியான்மர் நிலநடுக்கம்: இதுவரை 144 பேர் பலி, 730 பேர் காயம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *