”தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்” – மகளுக்கு பிடித்த உணவை கொடுக்க கல்லூரி வாசலில் கடை திறந்த தந்தை

Spread the love

சீனாவில் தனது மகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்பதற்காக, நல்ல வேலையை விட்டுவிட்டு, மகளின் கல்லூரிக்கு அருகே ஒரு உணவகத்தை அமைந்த தந்தையின் பாசம் கவனம் பெற்று வருகிறது.

லீ என்பவரின் மகள், ஜிலின் மாகாணத்தில் உள்ள சிப்பிங் நகரில் உள்ள ஜிலின் நார்மல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். விடுதியில் தங்கிப் படிக்கும் அவர், ஒருநாள் தன் தந்தையிடம் பேசும்போது, வீட்டில் சமைத்த ஃபிரைடு ரைஸ் சாப்பிட மிகவும் ஆசையாக இருப்பதாக சாதாரணமாகக் கூறியுள்ளார்.

மகளின் இந்த வார்த்தை, அவரை ஆழமாகத் தொட்டுள்ளது. உடனடியாக, அவர் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மகளுக்காக அவர், படிக்கும் கல்லூரிக்கு அருகே ஒரு உணவகத்தை அமைக்க முடிவு செய்திருக்கிறார் லீ. கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் இவரின் மனைவி உயிரிழந்த நிலையில், மகளை லீ தான் அரவணைத்து வருகிறார்.

தனது வேலையை விட்ட லீ, சுமார் 900 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, மகள் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒரு சிறிய தள்ளுவண்டி உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார்.

மகளுக்குப் பிடித்தமான பொருட்களைக் கொண்டு ஃபிரைடு ரைஸ் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார். எதிர்பார்த்த அளவிற்கு கடையில் வியாபாரம் நடக்கவில்லை, இதனால் லீ வருத்தமடைந்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *