தெலங்கானாவில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 29 பேர் பலியானதாக மாநில தலைமைச் செயலர் சாந்தி குமாரி இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநில தலைமைச் செயலர் சாந்தி குமாரி கூறியதாவது, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை பதிவான மழையின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 29 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தலா மூன்று கோடி ரூபாய் விடுவிக்கப்படுகிறது என்றார்.