தெலுங்கில் சமீபத்தில் வெளியான “தி கிரேட் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷோ’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை டினா ஸ்ராவ்யா. இவர் கடந்த புதன்கிழமை தெலங்கானா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பழங்குடியின தெய்வங்களான சம்மக்கா – சாரக்கா தரிசனத்திற்காக மேடாரம் பகுதிக்குச் சென்றிருந்தார்.
கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, பக்தர்கள் தங்களின் எடைக்கு நிகராக வெல்லத்தை துலாபாரத்தில் வைத்து வழங்குவது வழக்கம். ஆனால், நடிகை டினா ஸ்ராவ்யா தனது நாயைத் துலாபாரத்தில் அமர வைத்து, அதற்கு நிகராக வெல்லத்தை வைத்து எடை போட்டு வழங்கியிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, “நடிகை டீனா ஸ்ராவ்யாவின் செயல் புனிதமான இடத்தையும், பக்தர்களின் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது” என பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.