“தேசிய அளவில் அண்ணாமலைக்கு கட்சிப் பொறுப்பு” – அமித் ஷா உறுதி | The BJP will leverage Annamalai’s organizational skills in the party’s national framework: Amit Shah

1357772.jpg
Spread the love

புதுடெல்லி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அகில இந்திய அளவில் கட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவில் ஏற்பட உள்ள மாற்றம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டுமே வேட்புமனு பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி அண்ணாமலையின் பங்களிப்பு முன்னோடியில்லாதது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் ஒருங்கிணைப்பு செயல் திறன்களை பாஜக பயன்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜக மாநில தலை​வர் தேர்​தலுக்கு விருப்​ப மனு தாக்​கல் இன்று (ஏப்.11) நடை​பெற்றது. தமிழக பாஜக​வில் மாநில தலைவர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் பதவி​களுக்​கான தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டிருந்தது. அதன்​படி, இவ்​விரு பதவிகளுக்கு போட்​டி​யிடு​பவர்​கள் விருப்​ப மனு தாக்​கல் செய்​ய​லாம் என தமிழக பாஜக தேர்​தல் அதி​காரி எம்​.சக்​கர​வர்த்தி அறி​வித்​திருந்தார். இதற்கான, விருப்பமனுக்களை இன்று மதி​யம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்​டி​யிட விருப்​ப​முள்​ளவர்​கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாஜக நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தார். அவரைத் தவிர, மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்பமனு அளிக்காததால், போட்டியின்றி அப்பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்தரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *