தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.