“தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும்”- நயினார் நாகேந்திரன்| Nainar Nagendran on NDA ruling in india

Spread the love

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது.

தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது.

தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

கார்த்திகை தீபம் – திருப்பரங்குன்றம்
Chris

இந்நிலையில் இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் அயோத்தி இல்லையே.

அதனால் அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை. நாம் எல்லோரும் ராமரின் ஆட்சி பற்றி கேள்விப்பட்டிருப்போம்.

தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *