புதுதில்லி: தேசிய பங்குச் சந்தையில், செப்டம்பர் மாத காலாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபம், 57% அதிகரித்து ரூ.3,137 கோடியாக உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் தேசிய பங்குச் சந்தை மொத்த வருமானம் ரூ.5,023 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 25% அடிப்படையில் அதிகரித்துள்ளது.
வர்த்தக வருவாயைத் தவிர, செயல்பாடுகளின் வருவாயும் பிற வருவாய்களால் ஆதரிக்கப்பட்டது. இதில் முக்கியமாக கிளியரிங் சேவைகள், தரவு மையம் மற்றும் இணைப்பு கட்டணங்கள், பட்டியல் சேவைகள், குறியீட்டு சேவைகள் மற்றும் தரவு சேவைகள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.