தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புதிய தலைவர் நியமனம் | New chairman appointed for National Human Rights Commission

1344376.jpg
Spread the love

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த வி.ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தார். அதன்பிறகு தெலங்கானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். அங்கிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட வி. ராமசுப்பிரமணியன், கடந்த ஆண்டு ஜூனில் பணி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *