தேசிய மாணவர் படை தினம் : சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் மரியாதை | National Cadet Corps Day: Floral tributes at the Chennai War Veterans Memorial

1340894.jpg
Spread the love

சென்னை: தேசிய மாணவர் படை (NCC) தினத்தையொட்டி சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இன்று (நவ. 24) மலர் மரியாதை செலுத்தப்பட்டது.

உலகின் மிகப்பெரிய இளைஞர் அமைப்பாக விளங்கும் என்சிசி அமைப்பு 1948-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன் 76-வது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாண்டு வாத்தியம் முழங்க மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த லெப் ஜெனரல் கே. எஸ். பிராரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் உள்ளடக்கிய என்.சி. சி அமைப்பின் துணை தலைமை இயக்குநர் கமொடோர் எஸ்.ராகவ் வரவேற்றார். என்சிசி கமாண்டர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு, கே. எஸ். பிரார், அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக சென்னையை மையமாகக்கொண்ட என்சிசி 13-வது பட்டாலியன் இளம் வீரர்கள் குழு, கம்பீரமான அணிவகுப்பு நடத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *