மகாராஷ்டிர மாநிலத்தில் தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் அம்மாநில காவல்துறையிடம் இன்று சரணடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராம்சு துர்கு போயம் (எ) நர்சிங் (வயது-55) மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் ஷமு குஞ்சம் (வயது-25) ஆகிய இருவரையும் பிடிக்க ரூ.8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (டிச.20) கட்சிரோலி மாவட்ட காவல்துறையிடம் சரணடைந்தனர்.
இதுகுறித்து அம்மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தற்போது சரணடைந்திருக்கும் போயம் கடந்த 1992 ஆம் ஆண்டு டிபாகாட் தாலம் எனும் மாவோயிஸ்ட் பயங்கரவாத அமைப்பில் இணைந்ததாகவும், அவர் கடந்த 30 ஆண்டுகளாக கொலை, கொள்ளை உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், பல்வேறு மாவோயிஸ்ட் அமைப்புகளில் அவர் பயிற்சியாளராக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மிகவும் தேடப்பட்ட பயங்கரவாதியான அவரைப் பிடிக்க மாநில அரசின் சார்பில் ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.