தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகள் மக்களுக்கு பாதிப்பில்லாமல் நடைபெற அமைச்சர் வேலு அறிவுறுத்தல் | Minister instructs Teynampet to Saidapet flyover works are carried out without causing any harm to public

1379842
Spread the love

சென்னை: தே​னாம்​பேட்டை – சைதாப்​பேட்டை இடையி​லான மேம்​பாலப் பணியை நேற்று முன்தினம் நள்ளிரவில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். சென்​னை, அண்ணா சாலை​யில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் வகை​யில், தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை, மேம்​பாலம் கட்​டு​மானப் பணி​கள் விறு​விறுப்​பாக நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த மேம்​பாலத்​தில் இரும்பு உத்​திரங்​கள் பொருத்​தும் பணி​களை, போக்​கு​வரத்​துக்கு இடையூறு இல்​லாமல் மேற்​கொள்ள வேண்​டும் என்று அமைச்​சர் எ.வ.வேலு உத்​தர​விட்​டிருந்​தார். அதன்​படி, நேற்று முன்​தினம் நள்​ளிர​வில் பணி​கள் தொடங்​கின. அப்​போது பொதுப்பணித்துறை அமைச்​சர்எ.வ.வேலு பார்​வை​யிட்​டு, ஆலோ​சனை​களை வழங்கினார்.

தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை 3.20 கி.மீ. நீள​முடைய இந்த மேம்​பாலத்​தில் அடித்​தளப் பணி​களும், இரும்​புத் தூண்​கள் அமைக்​கும் பணி​களும் ஏற்​கெனவே நிறைவு​பெற்ற நிலை​யில், மேம்​பாலக் கட்​டு​மானத்​தில் மிக முக்​கிய​மான கட்​ட​மாகக் கருதப்​படும் இரும்பு குறுக்கு உத்​திரங்​கள் பொருத்​தும் பணி நேற்​று​முன்​தினம், நள்​ளிரவு தொடங்​கியது. ஒவ்​வொரு உத்​திர​மும் 22 டன் எடை​யுடையது. குறுக்கு உத்​திரம் 9 டன் எடை கொண்​டது.

ஒரு பாலக்​கண்​ணுக்கு 5 உத்​திரங்​கள் மற்​றும் 2 குறுக்கு உத்​திரங்​கள் பொருத்​தப்​படு​கின்​றன. அந்த வகை​யில், ஒரு பாலக்​கண்​ணில் மொத்​தம் 110 டன் எடை​யுள்ள இரும்பு கட்​டமைப்பு அமைக்​கப்​படும். இவ்​வளவு பரு​ம​னான இரும்பு உத்​திரங்​களை தூக்​கு​வதற்​காக உயர்​திறன் கிரேன்​கள் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

ஆய்​வின்​போது, நெடுஞ்​சாலைத்​துறை தலைமை பொறி​யாளர் (கட்​டு​மானம் மற்​றும் பராமரிப்​பு) கு.கோ.சத்​தி​யபிர​காஷ், நெடுஞ்​சாலைத் துறை சிறப்பு தொழில்​நுட்ப அலு​வலர் இரா.சந்​திரசேகர், கண்​காணிப்​புப் பொறி​யாளர் வி.சர​வணசெல்​வம் மற்​றும் ஒப்​பந்த நிறு​வனத்​தினர் உடனிருந்​தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *