முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
வெற்றி வாகை சூடி நல்லாட்சியைத் தமிழகத்தில் தருவதற்கு அனைவரையும் அரவணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும். இதனை விரைந்து செய்தால்தான் தேர்தல் களத்தை சந்திக்க முடியும்.
அனைவரையும் மீண்டும் இணைத்தால் மட்டுமே பிரசாரத்தில் பங்கேற்பேன். இணைக்காவிட்டால் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனால், கட்சியில் பிரிந்த ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைந்து கட்சியை வலுப்படுத்தி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் விரும்புகின்றனர்.
எனவே, கட்சியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைவார்களா அதற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.