தேனியில் சமபலத்தில் மோதும் அதிமுக,திமுக; ஷாக் கொடுக்குமா விஜய்யின் தவெக? கள நிலவரம் என்ன? | AIADMK, DMK face off in a close contest in Theni; Will AIADMK regain its lost influence?

Spread the love

முந்துவது யார்?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?”

1. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு, தமிழக வரலாற்றில் தனித்த இடம் உண்டு. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா ஆகிய மூவரும் களம் கண்ட தொகுதி. தற்போது திமுகவை சேர்ந்த மகராஜன் எம்.எல்.ஏவாக இருக்கிறார். தொகுதியில் இழந்த செல்வாக்கை மீட்டு தொகுதியை கைப்பற்ற வேண்டுமென அதிமுகவும் கடுமையாக வேலை செய்து வருகிறது.

தொகுதியில், முக்குலத்தோரும், பட்டியல் சமூகத்தினரும் பெரும்பான்மையாக இருக்கின்றனர். நாயக்கர், கவுண்டர், செட்டியார் சமூகத்தினர் தொகுதியில் பரவலாக இருக்கின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மகராஜனும், அதிமுகவில் அவருடைய தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர்.

கட்சிகளை பின்னுக்கு தள்ளி அண்ணன், தம்பி போட்டியாக இது பார்க்கபட்டது. இந்த முறை அதிமுகவில் வேறு வேட்பாளரை நிறுத்து வேண்டுமென கட்சியினர் போர்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால் லோகிராஜன் திரும்பவும் சீட் கேட்பதோடு தொகுதி முழுவதும் கட்சி பணிகளை செய்து  வருகிறார்.

கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமரும் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார்.

அமமுகவிற்கு தொகுதி ஒதுக்கபட்டால் டிடிவி தினகரகன் மனைவி அனுராதா நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

லோகிராஜன்

லோகிராஜன்

திமுக தரப்பில், சிட்டிங் எம்எல்ஏ மகராஜன் சீட் கேட்கிறார். புதிதாக கட்சியில் சேர்ந்திருக்கும் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்தர்நாத், தங்க தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் ஆகியோரும் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி என்பவர் வேட்பாளராக களம் இறங்குகிறார். தவெக-வை பொறுத்தவரையில் வேட்பாளர் தேர்வுக்கு பின் தான் வாக்குகள் குறித்து தெரியும் என்ற அளவில் தான் உள்ளது.

ஆண்டிபட்டியில் தேமுதிகவிற்கும் கணிசமான வாக்குகள் உள்ளது. இது திமுகவிற்கு கூடுதல் பலனளிக்கும் என்பதால் தற்போதைய நிலையில் மீண்டும் உதயசூரியனே உதிக்க வாய்ப்புள்ளது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *