தேனி மாவட்டத்தில் 5 வாக்காளர்களுக்காக அமைக்கபடவுள்ள வாக்குச்சாவடி!

Spread the love

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்துள்ள வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலையில், 5 வாக்காளர்களுக்காக மட்டுமே வாக்குசாவடி அமைக்கபோவதாக அறிவித்திருப்பது வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள வருசாநாடு பகுதியில் உள்ளது வெள்ளிமலை எஸ்டேட். வெள்ளிமலை பகுதி அடர்ந்த வனம் என்பதால் சென்று வருவதற்கு போதுமான சாலை வசதி கிடையாது. இங்கு சென்று வர மூன்று மணி நேரமாகும். இதனால் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவானது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்த இறுதி வாக்காளர் பட்டியலில் வெள்ளிமலை பகுதியில் செந்தில், ஜெயராணி, பவுல், சுதா, ரோகித். ஆகிய ஐந்து வாக்களர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்

Gyanesh Kumar – தலைமை தேர்தல் ஆணையர்

ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம், ஒரு ஓட்டு கூட வீணாக கூடாது என்ற எண்ணத்தில் வெள்ளிமலையில் உள்ள 5 வாக்காளர்களுக்காக மட்டுமே தேர்தல் ஆணையத்தால் ஒரு வாக்குச்சாவடி அமைக்கபடவுள்ளது. இந்த வாக்கு சாவடியானது அங்குள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப்பள்ளி கட்டிடடத்தில் அமையவுள்ளது.  

இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பேசும் போது, “தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதி, வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இது ஜனநாயக திருவிழாவின் ஒரு மகுடம்” என தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *