தேன் சுடரே: ”அதற்கு பெரிய பஞ்சாயத்தே நடந்தது!” – பாடலாசிரியர் மோகன் ராஜன் | வரித்துணையே 11 |lyricist mohan rajan varithunaiye 11 then sudare lover manikandan sean roldan

Spread the love

ஆனால், இந்தப் பாடல் மெதுவாகத்தான் பிக் அப் ஆகி எல்லோருக்கும் பிடிக்கத் தொடங்கியது. எனக்கு இந்தப் படத்தில் ‘விலகாதே’ பாடல் மிகவும் பிடிக்கும். அதனை சித் ஶ்ரீராம் பாடியிருக்க வேண்டியது. ஆனால், மிஸ் ஆகிவிட்டது” என்றவர், “படம், ஓடிடி-யில் வெளிவந்த பிறகு பெரியளவில் ‘தேன் சுடரே’ பேசப்பட்டது. அப்போது இந்தப் பாடலைக் கொண்டாடி, பல விஷயங்கள் இந்தப் பாடல் பற்றி எழுதினார்கள்.

அப்போது பாடலாசிரியராக எனக்கு அத்தனை திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ‘எனக்கு பிடித்த உன்னை, எங்கு நீ தொலைத்தாய்’ என்கிற வரியைக் குறிப்பிட்டு எப்படி இதை நீங்கள் எழுதினீர்கள் என ஷக்தி ஶ்ரீ கேட்டார்.

Then Sudare Song - Lyricist Mohan Rajan

Then Sudare Song – Lyricist Mohan Rajan

அந்தக் கேள்வியே என்னை நெகிழ வைத்துவிட்டது. (சிரித்துக் கொண்டே…) எனக்காகப் பலர் மீம்ஸ்களைப் பதிவிட்டார்கள். என்னையும் ஷான் ரோல்டனையும் பிடித்து ஜெயிலில் போடுங்கள் என்பது போன்ற ஜாலியான கமெண்ட்களும் இந்தப் பாடல் பற்றிய நினைவுகளில் எனக்கு நெருக்கமானது.

‘கனவே கனவே’ பாடலுக்குப் பிறகு ஒரு பாடலாசிரியராக எனக்கு அங்கீகாரத்தைத் தேடித் தந்த பாடல் இது. ஒரு பாடல் வெற்றியடைவது என்பதைத் தாண்டி அந்தப் பாடல் கொண்டாடப்பட வேண்டியதும் முக்கியமாகக் கருதுகிறேன்” என முடித்தார் மன நிறைவுடன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *