‘தேமுதிகவுக்காக சீட்டுகளை குறைக்கும் திமுக?’ – எரிச்சலில் கூட்டணி கட்சிகள்! |“DMK’s Plan to Allot Seats to DMDK Triggers Discontent Among Alliance Parties”

Spread the love

கடந்த முறை மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளுக்கு பாரபட்சம் இல்லாமல், தலா 6 சீட்டுகளை அறிவாலயம் ஒதுக்கியது. இந்த முறையும் அதே ஸ்டைலில் பாரபட்சம் இல்லாமல் தலா 4 சீட்டுகள் என பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது. இதில்தான் அத்தனை கூட்டணி கட்சியினரும் அப்செட் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

‘திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி 20 நாட்களுக்கு மேலாகியும் தேமுதிகவை இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. ஏனெனில், தேமுதிக கூட்டணியை உறுதி செய்த சமயத்திலேயே அவர்களுக்கான நம்பரையும் திமுக இறுதி செய்துவிட்டது என்கிறார்கள்.

பெ.சண்முகம்

பெ.சண்முகம்

9-12 இடங்களை தேமுதிக எதிர்பார்த்தது. அதற்கு அறிவாலயம் க்ரீன் சிக்னல் காட்டியது. ஒருவேளை காங்கிரஸ் வெளியேறினால் தேமுதிக பக்கபலமாக இருக்கும் என திமுக நம்பியது. ஆனால், இப்போது காங்கிரஸூம் 3 தொகுதிகளை அதிகமாக வாங்கிவிட்டு கூட்டணியில் நீடிக்கிறது. அதனால்தான் விசிகவுக்கும் கம்யூக்களுக்கும் நாம் யாருக்காக சீட்டுகளை விட்டுக் கொடுத்து தியாகம் செய்யப்போகிறோம் எனும் குழப்பம் எழுந்திருக்கிறது.

கூட்டணியை தக்கவைக்க திமுகவுக்கு வலுசேர்க்க அவர்களுக்காக வேண்டுமானால் விட்டுக்கொடுக்கலாம், கொள்கைப் பிடிப்பே இல்லாத கால் போன போக்கில் போகும் தேமுதிகவுக்காக எதற்கு நாம் சீட்டுகளை தியாகம் செய்ய வேண்டும் என்கிற கேள்வி கூட்டணி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கே அழைக்காமல், இறுதியில் அவர்களை அழைக்கும் முடிவில் அறிவாலயம் இருப்பது இவர்களுக்கு சந்தேகத்தை கொடுத்திருக்கிறது. ‘கூட்டணிக்காக விட்டுக்கொடுங்க’ என இவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு தேமுதிகவுக்கு அள்ளி கொடுத்தால் என்ன செய்வது என்கிற குழப்பமும் சங்கடமும் விசிகவுக்கும் கம்யூக்களுக்கும் இருக்கிறது’ என்கின்றனர் விவரப்புள்ளிகள்.

கூட்டணி கட்சியினரின் சங்கடத்தைப் புரிந்துகொண்டு திமுக தரப்பில் தேமுதிகவிடம் பேசியதை விட சீட்டுகளை குறைத்துக் கொள்ளுமாறு கூறியிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *