தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் திருத்தணியில் நடைபயணம் | Premalatha vijayakanth leads a walk in Thirutani

1371968
Spread the love

திரு​வள்​ளூர்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, முதற்​கட்ட சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரும் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, நேற்று திருத்​தணி​யில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம் மேற்​கொண்​டார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தலை முன்​னிட்​டு, ‘உள்​ளம் தேடி’- இல்​லம் நாடி’(​வாக்​குச் சாவடி நிர்​வாகி​களு​ட​னான சந்​திப்​பு), ‘கேப்​டனின் ரத யாத்​திரை’–’மக்​களை தேடி மக்​கள் தலை​வர்’ (மக்​களு​டன் சந்​திப்​பு) ஆகிய பெயர்​களை கொண்ட தமிழகம் முழு​வது​மான முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நேற்று முன்​தினம் கும்​மிடிப்​பூண்டி பேரவை தொகு​திக்கு உட்​பட்ட ஆரம்​பாக்​கத்​தில் தொடங்​கி​னார்.

இந்த சுற்​றுப்​பயணத்​தின் 2-வது நாளான நேற்று காலை ஆவடி சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட பட்​டாபி​ராமில் உள்ள தனி​யார் திருமண மண்​டபத்​தில் வாக்​குச் சாவடி நிர்​வாகி​களு​டான ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் தேமு​திக பொருளாளர் எல்​.கே.சு​திஷ், உயர்​மட்​டக் குழு உறுப்​பினர் நல்​லதம்​பி, ஆவடி மாநகர் மாவட்ட செய​லா​ளர் நா.​மு.சங்​கர் உள்​ளிட்​டோர் பங்​கேற்றனர்.

தொடர்ந்​து, மாலை பிரேமலதா திருத்​தணி​யில் நடைபயணம் மேற்​கொண்​டார். திருத்​தணி அரக்​கோணம் சாலை​யில், புதிய பேருந்து நிலை​யத்​தில் தொடங்​கிய இந்த நடைபயணம், மபொசி சாலை வழி​யாக சுமார் 2 கிமீ தூரத்​துக்கு நடை​பெற்​றது.

இதில், திருத்​தணி முரு​கன் கோயில் மலை பாதை சந்​திப்பு அருகே பிரேமல​தாவுக்​கு, தேமு​திக நிர்​வாகி​கள், கிரேன் மூலம் மாலை அணி​வித்​ததோடு, 5 அடி உயரம் கொண்ட வெள்ளிவேல் வழங்​கினர். அந்த வேலை கையில் ஏந்​தி​ய​வாறும், மக்​களை பார்த்து கையசைத்​த​வாறும் பிரேமலதா நடைபயணம் மேற்​கொண்​டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *