ஜனவரி 9 கடலூரில் நடக்கின்ற மாநாடுக்கும் தயாராகி வருகிறோம். அந்த மாநாடுதான் இப்போதைக்கு எங்களுடைய அடுத்த இலக்கு. அந்த மாநாட்டில் ஒரு நல்ல ஒரு அறிவிப்பு நிச்சயமாக வழங்குவோம்.
கேப்டன் இருந்த காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளும், மத்தியில் இருக்கும் கட்சிகளும் தோழமை கட்சிகள்தான். அந்த வகையில எல்லாருமே தோழமையோடு, நட்புணர்வோடு பழகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நல்ல ஒரு தகவலை அறிவிப்போம்.

எங்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் களத்தில் இருக்கிறார்கள். ஒருவருடமாக இந்தத் தேர்தலுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 68000 பூத்திலும் பூத் கமிட்டி அமைத்திருக்கிறோம்.
எனவே, தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மட்டும் இப்போது உங்களிடம் உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 234 தொகுதிகளும் எங்கள் இலக்குதான்.
காங்கிரஸ் – தாவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்றால் அது குறித்து அவர்களிடம்தான் பேச வேண்டும். எங்களுக்கு எந்தக் கருத்தும் கிடையாது. எல்லா கட்சியும் எங்களுக்கு நட்புதான் என்பதால், உரிய நேரத்தில் தெளிவாக பதில் சொல்லவோம்.” என்றார்.